மெல்பர்னில் பார்வையாளர்களை சுண்டி இழுத்த தோனியின் பாகிஸ்தான் ரசிகர் Reviewed by Momizat on . மெல்பர்ன் கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யின்­போது பாக மெல்பர்ன் கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யின்­போது பாக Rating: 0

மெல்பர்னில் பார்வையாளர்களை சுண்டி இழுத்த தோனியின் பாகிஸ்தான் ரசிகர்

மெல்பர்னில் பார்வையாளர்களை சுண்டி இழுத்த தோனியின் பாகிஸ்தான் ரசிகர்

மெல்பர்ன் கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெற்­று­வரும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­யின்­போது பாகிஸ்தான் ர­சிகர் ஒருவர் அணிந்­தி­ருந்த ஜேர்சி (சீருடை) பார்­வை­யா­ளர்கள் அனை­வ­ரையும் திரும்பிப் பார்க்க வைத்­தது.

இந்­திய ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனியின் பெய­ரையும் இலக்­கத்­தையும் (7) தாங்­கிய அந்த ஜேர்சி பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் ஜேர்­சியை ஒத்­த­தாக இருந்­தது.

இந்த ஜேர்­சி­யுடன் பாகிஸ்தான் அணியை அந்த ர­சிகர் ஊக்­கு­வித்­த­போது அரங்­கி­லி­ருந்த பெரும்­பா­லா­ன­வர்­க­ளினால் அவர் ஈர்க்­கப்­பட்டார்.

இந்­தி­யா­வுக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான தற்­போ­தைய அர­சியல் கொந்­த­ளிப்­புக்கு மத்­தியில் அயல்­நாட்டின் ஜேர்­சியை அணி­வது ஆபத்­தா­ன­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

இம் மாத முற்­ப­கு­தியில் இந்­திய கிரிக்கெட் ர­சிகர் ஒருவர் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அவ்­ரி­டியின் இலக்கம் கொண்ட ஜேர்­சியை அணிந்­த­மைக்­காக அஸாம் பொலி­ஸா­ரினால் கைது­ செய்­யப்­பட்டு பின்னர் விடு­விக்­கப்­பட்டார்.

அந்த ர­சிகர் கைதா­னதை அடுத்து ‘‘இவ்­வா­றான ஒரு நிலை ஏற்­பட்­டமை வெட்­கக்­கே­டான செய­லாகும். கிரிக்­கெட்டில் அர­சியல் புகுந்து விளை­யா­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும்’’ என அவ்­றிடி குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே­போன்று இன்­னு­மொரு சம்­பவம் கடந்த பெப்­ர­வ­ரியில் இடம்­பெற்­றது.
இந்­திய டெஸ்ட் அணித் தலைவர் விராத் கோஹ்லியின் ரசிகர் ஒருவர் தனது வீட்டுக் கூரையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றியமைக்காக அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Comments

comments

Clip to Evernote

Leave a Comment

© 2015-2017 Powered Sri Lankan Echo

content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top