எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள்! புலம்பும் ஞானசார தேரர் ! Reviewed by Momizat on . பலர் எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொடை பிரதேசத்தில் நேற்று -07- மாலை பலர் எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நுகேகொடை பிரதேசத்தில் நேற்று -07- மாலை Rating: 0

எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள்! புலம்பும் ஞானசார தேரர் !

எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள்! புலம்பும் ஞானசார தேரர் !
பலர் எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தில் நேற்று -07- மாலை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…
எமது போராட்டத் தோழர்கள் பலர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள். அவர்கள் மேலும் சின்னஞ் சிறிய கடைகள் பலவற்றை போட்டுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கு பொதுபல சேனாவை அழிக்கும் தேவை காணப்பட்டது. ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் அதே தேவை காணப்பட்டது.
யாருடன் இணைந்து செயற்படுவது எவ்வாறு தேசிய வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பது என்பதில் எமக்கு பிரச்சினை உள்ளது.
விழுந்த இடத்திலிருந்து எவ்வாறு எழுவது என்பது தொடர்பில் குழப்ப நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.
சிங்கள பௌத்தர்கள் நாட்டை ஆட்சி செய்வதாக தென்பட்டாலும் உண்மை நிலைமை அதுவல்ல. அதுவே இன்று நாட்டின் பிரதான பிரச்சினையாக அமைந்துள்ளது.
சிங்கள பௌத்த தலைவர்களை வழிநடத்துவதும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதும் எதிரி சக்திகளேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments

comments

Clip to Evernote

© 2015-2017 Powered Sri Lankan Echo

content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top