காரைதீவு சுகாதார வைத்தியஅதிகாரி றிஸ்னீன் முத் அதிரடி நடவடிக்கையால் மாடறுக்கும் இடத்தை மூடுமாறு உத்தரவு ! Reviewed by Momizat on . *காரைதீவு சகா*  காரைதீவுப்பிரதேசத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளியில் தற்காலிகமாக தனியார்வீடொன்றில் இயங்கிவந்த மாட்டிறைச்சி அறுக்கும் கொல்களமொன்றை உடனடியாக மூடிவிடுமா *காரைதீவு சகா*  காரைதீவுப்பிரதேசத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளியில் தற்காலிகமாக தனியார்வீடொன்றில் இயங்கிவந்த மாட்டிறைச்சி அறுக்கும் கொல்களமொன்றை உடனடியாக மூடிவிடுமா Rating: 0

காரைதீவு சுகாதார வைத்தியஅதிகாரி றிஸ்னீன் முத் அதிரடி நடவடிக்கையால் மாடறுக்கும் இடத்தை மூடுமாறு உத்தரவு !

காரைதீவு சுகாதார வைத்தியஅதிகாரி றிஸ்னீன் முத் அதிரடி நடவடிக்கையால் மாடறுக்கும் இடத்தை  மூடுமாறு உத்தரவு !

*காரைதீவு சகா*

 காரைதீவுப்பிரதேசத்திற்குட்பட்ட மாவடிப்பள்ளியில் தற்காலிகமாக தனியார்வீடொன்றில் இயங்கிவந்த மாட்டிறைச்சி அறுக்கும் கொல்களமொன்றை உடனடியாக மூடிவிடுமாறு காரைதீவுப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னீன் முத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாகக் கிடைத்துவந்த முறைப்பாடுகள் மற்றும் நேரடி விஜயத்தின்போது அக்கொல்களத்தின் சுகாதாரமற்ற நிலையைக்கருத்திற்கொண்டு பிரதேசசபையின் அறிறுத்தலோடு அதனை மூடிவிடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதார வைத்தியஅதிகாhரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இப்பிரதேசத்திலியங்கிவந்த ஆறு இறைச்சிக்கடைகள் திடீர் முற்றுகைக்கு இலக்கானது.
மூன்று கோழியிறைச்சிக்கடைகளும் மூன்று மாட்டிறைச்சிக்கடைகளும் இவ்விதம் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்னீன் முத் தலைமையிலான குழுவினரால் திடீர்ப் பாய்ச்சலுக்குள்ளானது.
அவை சுகாதாரமற்ற சூழலில் இயங்கிவருவது குறித்தும் மனித உடல்நலத்திற்கு கேடான நிலையில் இயங்கிவருவது குறித்தும் அவற்றுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டது.


எனினும் பிரஸ்தாப இறைச்சிக்கடை உரிமையாளர்கள் வைத்தியஅதிகாரியைகண்டு தமக்கு சற்று காலஅவகாசம் தருமாறும் அதற்குள் சுகாதார நிலைமையை சீர்செய்வோம் எனக்கேட்டுக்கொண்டனர்.
அதனையடுத்து எதிர்வரும் 15ஆம் திகதிவரை காலக்கெடுவிடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 16ஆம் திகதிய விஜயத்தின்போது சுகாதாரசீர்கேடு காணப்படுமானால் மறுகணம் எவ்வித தயவுதாட்சண்யமுமின்றி சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென வைத்தியஅதிகாரி றிஸ்னீன் முத் கடுமையாகப்பதிலளித்தார்.
இதேவேளை பல்லாண்டுகாலமாக மண் குப்பையால் மூடப்பட்டுக்கிடந்த காரைதீவு பிரதானவீதியிலுள்ள வடிகான் வைத்தியஅதிகாரியின் துரித செயற்பாட்டையடுத்து நேற்று தோண்டப்பட்டன. வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுஇவ்வாறிருக்க மாளிகைக்காடு கடற்கரைப்பகுதியில் இயங்கிவரும் மீனசந்தை குறித்து முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து வைத்தியஅதிகாரி றிஸ்னீன் முத் தலைமையிலான குழுவினர் அங்கு திடிர்ப்பாய்ச்சலை மேற்கொண்டனர்.


அங்கு மீன் கழுவிய நீர் மற்றும் கழிவுகள் சுகாதாரமற்றமுறையில் வீசப்படுவதுகுறித்து அவதானிக்கப்பட்டது. அவற்றை நிவர்த்திசெய்யவேண்டும் இன்றேல் இவ்விடத்தில் சந்தை இயங்கமுடியாது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.
மீன்சந்தைக்காரர்கள் தொடர்பில் தமக்கு உரிய இடவசதி செய்துதந்தால் நாம் அதற்குரிய ஏற்பாடுகளைச்செய்வோம் என்று கூறப்பட்டது. அது பிரதேசசபையைச்சார்ந்தது என்றாலும் அதற்காக சுகாதாரமற்ற நிலை தொடர்வதை அனுமதிக்கமுடியாது.
எனினும் இது தொடர்பாக இறுதிமுடிவெடுக்கவேண்டும் எனவே மிகவிரைவில் மீனவர்பிரதிநிதிகளுடனான கூட்டமொன்று சுகாதாரவைத்தியஅதிகாரி பண்pமனையில் நடாத்தப்படும்.அதில் இதற்க முடிவெடுப்போம் எனத்தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Comments

comments

Clip to Evernote

© 2015-2017 Powered Sri Lankan Echo

content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top