ஜா-எல – தடுகம பிரதேசத்தில் சதுப்பு நிலத்தால் பதற்றநிலை… Reviewed by Momizat on . ஜா-எல – தடுகம பிரதேசத்தில் சதுப்பு நிலம் நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக வந்த அரசாங்க அதிகாரிகளுக்கும், அந்த நிலத்தின் உரிமையாளர்கள் என கூறப்படும் ஜா-எல – தடுகம பிரதேசத்தில் சதுப்பு நிலம் நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக வந்த அரசாங்க அதிகாரிகளுக்கும், அந்த நிலத்தின் உரிமையாளர்கள் என கூறப்படும் Rating: 0

ஜா-எல – தடுகம பிரதேசத்தில் சதுப்பு நிலத்தால் பதற்றநிலை…

ஜா-எல – தடுகம பிரதேசத்தில்  சதுப்பு நிலத்தால் பதற்றநிலை…
ஜா-எல – தடுகம பிரதேசத்தில் சதுப்பு நிலம் நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக வந்த அரசாங்க அதிகாரிகளுக்கும், அந்த நிலத்தின் உரிமையாளர்கள் என கூறப்படும் தரப்பினருக்கும் இடையே இன்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்க அதிகாரிகளுக்கு குறித்த நிலப்பகுதிக்கு செல்ல அனுமதிக்காமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலப்பகுதி எந்தவொரு அனுமதியுமின்றி நிரப்பப்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் பல முறை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு, நிரப்பப்பட்டு வரும் நிலப்பகுதியை உடனடியாக நிறுத்துவதற்கு செயற்படுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனினும் குறித்த உத்தரவை மதிக்காது அங்கு நிலப்பகுதி நிரப்பப்பட்டுவருவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக கண்டறிவதற்கு இன்று காலை குறித்த இடத்திற்கு அரசாங்க அதிகாரிகள் சென்றுள்ள நிலையில் குறித்த தரப்பினர் அவர்களை அனுமதிக்காது தடை ஏற்படுத்தியுள்ளனர்.

Comments

comments

Clip to Evernote

© 2015-2017 Powered Sri Lankan Echo

content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top