நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு சங்கடத்தை ஏற்படுத்திய அமைச்சர் ரிசாதின் கேள்வி Reviewed by Momizat on . வில்பத்து விவகாரம் தொடர்பில் நேற்று (09) இரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி அரசியல் விவகாரத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை வில்பத்துவின் தோற்றம் என பொய் வில்பத்து விவகாரம் தொடர்பில் நேற்று (09) இரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி அரசியல் விவகாரத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை வில்பத்துவின் தோற்றம் என பொய் Rating: 0

நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு சங்கடத்தை ஏற்படுத்திய அமைச்சர் ரிசாதின் கேள்வி

நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு சங்கடத்தை ஏற்படுத்திய அமைச்சர் ரிசாதின் கேள்வி

வில்பத்து விவகாரம் தொடர்பில் நேற்று (09) இரவு இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி அரசியல் விவகாரத்தில் 1984 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை வில்பத்துவின் தோற்றம் என பொய்யான கூகுல் வரைபடைத்தைக் காட்டி அங்கு 2014ஆம் ஆண்டுக்குப் பிறகே முஸ்லிம்கள் காட்டை அழித்து குடியேறியுள்ளனர் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க,இல்லை, சகோதரரே நீங்கள் சொல்வது தவறு. இன்றை நிகழ்ச்சிக்காக உங்களுக்கு யாரோ பிழையான தகவல்களை வழங்கியிருக்கிறார்கள் என்று அமைச்சர் ரிசாத் பதியுதீன் அமைதியாக எடுத்துக்கூற,

என்ன பிழை இருக்கிறது கௌரவ அமைச்சரே என நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்க
சகோதரரே 1996ஆம் ஆண்டு அதற்குப்பிற்பட்ட காலப்பகுதி அளவிலேயே கூகுல் மெப் சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில் எப்படி 1984ஆம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட்டிருக்க முடியும். இதிலிருந்தே இந்த தகவல் பொய் என்பது தெளிவாகவே தெரிகிறது.
மழுப்புகிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். பேச்சை மாத்துகிறார். இடைவேளை கொடுக்கிறார்.

அமைச்சர் நிகழ்ச்சித் தொகுப்பாளரை நோக்கி தொடுக்கும் சங்கட கேள்விகள் கேட்கும் போது அல்லது வில்பத்துவில் முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான ஆதாரங்களை காண்பிக்க முயற்சிக்கும் போதும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் உடனே குறுக்கிட்டு இடைவேளைக்கு செல்கிறார்.
அத்துடன், அமைச்சர் ரிசாத் பதியுதீனை அமைதியிழக்கச் செய்து பிரச்சினையை பூதாகரமாக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர் எடுத்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை. அமைச்சர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நிதானம் இழக்காது மிகத் தைரியமாக பதிலை வழங்கியிருந்தார்.

ஆக, மொத்தத்தில் அமைச்சரை பலியெடுக்கும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியாகவே நேற்றைய நிகழ்ச்சி அமைந்தது. அமைச்சர் ரிசாத் பதியுதீன், தனக்குத் தெரிந்த சிங்கள மொழியில் மிகத் தைரியமாக தனது சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்தியிருந்தாலும், இது அமைச்சரின் தனிப்பட்ட விடயமாக கருதாமல் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் ஒற்றுமைப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

ஓட்டு மொத்த பேரினவாத சக்திகள் வில்பத்து விவகாரத்தை பெரிதாக்கி அங்கு முஸ்லிம்கள் வாழவில்லை யுத்தத்திற்குப் பின்னரே காட்டை அழித்து பலவந்தமாக குடியேறியுள்ளனர் என்று காட்ட முயல்கிறார்கள்.

யா அல்லாஹ் எமது சமூகத்தின் வெற்றிக்காக எப்போது துணைபுரிவாயாக…
-இனாமுல் ஹஸன்

Comments

comments

Clip to Evernote

© 2015-2017 Powered Sri Lankan Echo

content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top