HOT NEWS கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 13ஆம் திகதி விடுமுறை –கல்வி அமைச்சர் Reviewed by Momizat on .   கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்ட   கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்ட Rating: 0

HOT NEWS கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 13ஆம் திகதி விடுமுறை –கல்வி அமைச்சர்

HOT NEWS  கிழக்கு மாகாணத்தில் உள்ள  பாடசாலைகளுக்கு 13ஆம் திகதி விடுமுறை –கல்வி அமைச்சர்

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

இலங்கைத்தமிழர் ஆசிரியர்சஙகத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா இன்று விடுத்துள்ள வேணடுகோளுக்கு அமைச்சர் செவிசாய்த்தமைக்காக அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மாகாணசபைக்குட்பட்ட பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சே தீர்மானிக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

13ஆம் திகதிக்கான பாடசாலைக்கான பாடசாலை நாள் பிறிதொரு தினத்தில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தைப்போன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) விடுமுறை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர; சி.தண்டாயுதபாணியிடம் இலங்கைத்தமிழர் ஆசிரியர்சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா வேண்டுகோள்விடுத்திருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு சங்கத்தலைவர் சகா இந்த கோரிக்கையினை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்த கல்வி அமைச்சு ஆராய்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமையை விடுமுறையாக அறிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உத்தியோகபுர்வமாக அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

*

Comments

comments

Clip to Evernote

© 2015-2017 Powered Sri Lankan Echo

content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top