போராட்டம் முடிந்து வீடு திரும்பிய இளைஞன்: திருநங்கை செய்த நெகிழ்ச்சி செயல் Reviewed by Momizat on . போராட்டம் முடிந்து வீடு சென்று கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் திருநங்கை ஒருவர் காசு கேட்டுள்ளார். அப்பொழுது, அந்த இளைஞர் அக்கா எங்கிட்ட இரண்டு ரூபாய் தான் இருக்கு என போராட்டம் முடிந்து வீடு சென்று கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் திருநங்கை ஒருவர் காசு கேட்டுள்ளார். அப்பொழுது, அந்த இளைஞர் அக்கா எங்கிட்ட இரண்டு ரூபாய் தான் இருக்கு என Rating: 0

போராட்டம் முடிந்து வீடு திரும்பிய இளைஞன்: திருநங்கை செய்த நெகிழ்ச்சி செயல்

போராட்டம் முடிந்து வீடு திரும்பிய இளைஞன்: திருநங்கை செய்த நெகிழ்ச்சி செயல்

போராட்டம் முடிந்து வீடு சென்று கொண்டிருந்த ஒரு இளைஞனிடம் திருநங்கை ஒருவர் காசு கேட்டுள்ளார். அப்பொழுது, அந்த இளைஞர் அக்கா எங்கிட்ட இரண்டு ரூபாய் தான் இருக்கு என்று சோகமாக கூறியுள்ளான்.

அப்பொழுது, அந்த திருநங்கை என்ன கண்ணு போராட்டம் போய்ட்டு வர்ரியா என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த இளைஞன், ஆமா அக்கா 6 நாள் அங்க தான் இருந்தேன், இபொழுது தான் விரட்டி விட்டார்கள் என்று கூறியுள்ளான்.

உடனே அந்த திருநங்கை தன்னிடம் இருந்த நூறு ரூபாய் எடுத்து அந்த இளைஞனிடம் கொடுத்து நல்லா பிரியாணி வாங்கி சாப்பிடு கண்ணு என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த வாலிபர் பணம் எல்லாம் வேண்டாம் அக்கா, என்று மறுக்க ஆனால், அந்த திருநங்கையோ சட்டென்று வாலிபரின் பையில் தினித்துவிட்டு சென்று விட்டார்.

இதைப் பார்த்து அங்கிருந்த அனைவருக்கும் கண்ணில் தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது.

அதில், ஒருவர் கூறியுள்ளார், நாம் எத்தனையோ முறை திருநங்கையை அசிங்கமாக திட்டியுள்ளோம். ஆனால் அவர்கள் இன்று செய்த காரியம் நமக்கு எல்லாம் செருப்படி கொடுத்தாற் போல் உள்ளது என கூறி கண்ணை கசக்கியுள்ளார்.

 

Clip to Evernote

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top