அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அயர்லாந்தில் ஒரு வீடு ????

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அயர்லாந்தில் ஒரு வீடு இருப்பதாக இணைய ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டிருந்ததாக ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா,பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறித்து பல இணைய ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த போலியான குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றமையால் அதற்கு எதிராகவே ரில்வின் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.