O/L ஏழுதிய மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம்! Reviewed by Momizat on . கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற, கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றி, பெறுபேற்றை எதிர்பார்த்திருக்கும் மாணவியொருவர், சிசுவொன்றைப் பிரசவித்துள்ளார கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற, கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றி, பெறுபேற்றை எதிர்பார்த்திருக்கும் மாணவியொருவர், சிசுவொன்றைப் பிரசவித்துள்ளார Rating: 0

O/L ஏழுதிய மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம்!

O/L  ஏழுதிய மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம்!

கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற, கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்றி, பெறுபேற்றை எதிர்பார்த்திருக்கும் மாணவியொருவர், சிசுவொன்றைப் பிரசவித்துள்ளார்.

அழகிய ஆண் சிசுவொன்றையே அம்மாணவி, பெற்றெடுத்துள்ளார். இந்தச் சம்பவம், பதுளை எல்லை பகுதியில் கடந்த 25ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.

தாயும் சேயும், பதுளை அரசினர் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து, எல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.டி.என். கருனாரட்ணவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அந்த மாணவியைக் கர்ப்பமாக்கி, தாயாக்கியதாகக் கூறப்படும் பஸ் நடத்துநரொருவரை, எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவியொருவர் கர்ப்பிணியாக இருக்கிறார் என்பது தொடர்பில் எல்ல பகுதியின் குடும்பநல மருத்துவத்தாதி அறிந்திருந்த போதிலும், அது பற்றி மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை.

இந்நிலையில் அந்த மருத்துவத்தாதிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

Clip to Evernote

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top