ஈழத்தமிழர்களின் தங்கம் எங்கே? நாடாளுமன்றில்  கேள்வி.. அரசாங்கத்தின் பதில் என்ன தெரியுமா?

நாட்டில் இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் அந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் பெறுமதியான பொருட்கள், தங்கம் எல்லாம் எங்கே என நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த பகீர் கேள்வியை அரசாங்கத்திடம் முன்வைத்தார்.

இதன்போது, “யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம், எங்கே? இதுவரையில் அவர்களின் தங்கம் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படவில்லையென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

குறித்த கேள்விக்கு அரசு தரப்பிலிருந்து அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளித்துள்ளார்.

இதில் “உங்களுடைய கேள்விக்கு பதிலளிக்க 2 வார கால அவகாசம் தேவை” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் ஆறாவது தடவையாக தவணை கேட்கிறது” என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.