போலி நாணயத்தாள் 2 தனியார் வங்கிக்கிளைகளில் இருந்து விநியோகம் !

-abu kadar-

காத்தான்குடியில் போலி நாணயத்தாள் புழக்கம் தொடர்பாக காத்தான்குடி ஊடகவியலாளரால் வெளியிடப்பட்ட செய்தி….

மாவட்டத்தின் ஓரிடத்தில் உருவாகும் இப்படிப்பட்ட மோசடீயான குற்றம் மற்றைய எமது பகுதியை நோக்கி தொற்றுநோய் போன்று பரவலடையும்.

சமீபகாலமாக காத்தான்குடிப் பகுதியில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இன்றுடன் சேர்த்து கடந்த இரண்டு மாதகாலப் பகுதிக்குள் எனக்குக் கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை எட்டுக்கும் அதிகமாகும்.

இதைவைத்துப் பார்க்கின்றபோது இலங்கையிலேயே போலி நாணயத்தாள்களின் புழக்கம் காத்தான்குடியில்தான் முன்னணியில் இருக்கிறதோ என்று சந்தேகிக்க வைக்கின்றது. ஒரு செறிவுநிலை வர்த்தகக் கேந்திர நிலையமான காத்தான்குடிக்கு இது ஆரோக்கியமானதல்ல.

இந்த போலி நாணயத்தாள்களின் புழக்கத்தில் காத்தான்குடியில் அமைந்துள்ள இரண்டு தனியார் வங்கிக்கிளைகள் தொடர்புபட்டிருப்பதாக  ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக குறித்த தனியார் வங்கிக் கிளையின் முகாமையாளரை நேரில் சந்தித்து ஊடகவியலாளர் விசாரித்தபோது அவர் அதனை சிறுபிள்ளைத்தனமாக நியாயப்படுத்தி நழுவிக்கொள்ள முயன்றார். அவருடைய வாக்குமூலத்தை ஒலிப்பதிவு செய்வதற்கும் மறுப்புத்தெரிவித்தார்.

வங்கிகளினூடாக போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வருவது சாதாரணமான விடயமல்ல. அது வங்கி ஊழியர்களால் அறிந்துகொண்டே இழைக்கப்படுகின்ற ஒரு தேசவிரோதச் செயற்பாடாகும்.

ஆயினும் இறுதியில் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் வங்கி ஊழியர்கள் அல்ல, மாறாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களே.

எனவே வர்த்தக நடவடிக்கைகளில் மும்முரமாகவும் முழுநேரமாகவும் ஈடுபட்டு வருகின்ற காத்தான்குடி வாழ் வர்த்தகர்களாவர்.

இவர்களிடமிருந்து தமது பணத்தை கொடுத்து போலி பணம் பெறும் நிலை எமது தமிழ் முஸ்லிம்  மக்களுக்கு உருவாகுன்றது. எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டேனும் இப்போலி நாணயத்தாள்களின் விடயத்தில் அவதானமாக இருப்பது கட்டயாமானது.

இன்னும் பல பொருட்கள்   இங்கு போலியாக தயாரிக்க்படுவதாகவும் கூறப்படுகின்றது .