ஆசிரிய நியமனத்துக்கு போட்டிப் பரீட்சை அவசியமா?

-Shifaan Bm-

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் போட்டிப் பரீட்சை ஒன்றின் மூலம்
தொழில் ஒன்றைப் பெற நாடுவதால் பட்டதாரிப் பரீட்சாத்திகளும்
பலியாகவேண்டிய சூழ்னிலையே உள்ளது. அரிய சில தொழில்களுக்கு
அவ்வாறான பரீட்சைகள் இன்றியமையாதவையே. ஆனால் ஆசிரிய நியமனங்களிலும் அவற்றைப்பரீட்சிப்பது எவ்வளவு தூரம் பாதகமானது என்பதனை பரீட்சை முடிவுகள் காட்டியவண்ணம் உள்ளன.

கிழக்கு மாகாணப் பட்டதாரிகளின் ஆசிரியர் நியமனம் தொடர்பாக இரு
வகையான பரீட்சைத் தாள்கள் பரீட்சிக்கப்பட்டன. ஒன்று நுண்ணறிவு மற்றையது பொது அறிவு. பரீட்சாத்தியின் நுண்ணறிவு பிரச்சினைகளுக்குத்
தீர்வுகாணல், பண்பியலாகச் சிந்தித்தல்,எண்ணக்கருக்களையும் மொழியையும் விளங்கிக்கொள்ளல், கற்றல் போன்றவற்றுக்கான திறன்களை உள்ளடக்கிய மனம் சார்ந்த திறமைகளைத் தழுவி அமைந்த, மனத்தின் ஒரு இயல்பாகும். சில சமயங்களில் உளவியலாளர்கள், இதனை, ஆக்கத்திறன்,ஆளுமை, மதி நுட்பம் ஒருவரின் சிறப்புப் பண்புகள் என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே கருதுகிறார்கள்.

பொது அறிவு ,சமூகம்,நிகழ்வுகள்,இலக்கியம் மற்றும் உலகம் குறித்த சிறு
தகவல்களாகும்.இத்தகவல்கள் உலக வாழ்வினிற்கு நேரான பலன்கள்
எதனையும் தராதபோதும்,தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளைப்
புரிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது.

ஒருவரின் பொது அறிவுத்திறன் அவரது நினைவாற்றல் மற்றும் நடப்பு
உலக பார்வையை வெளிப்படுத்துவதாக சோதிக்கப் படுகிறது.

ஆனால் நடாத்தப் படும் பொது அறிவு பரீட்சையானது ஒரு பரீட்சாத்தியின்
ஞாபகத்திறனை கணனிக்கு  நிகராக பரீட்சிக்க நாடுவதால்
பரீட்சாத்திகள் ரோபோக்கள் போன்று தொழிற்பட்டால் மாத்திரமே
பரீட்சைத்திணைக்களம் நடாத்த எதிர்பார்க்கும் வெளியீட்டைக்
கொடுக்கமுடியும். இதற்குக் கிழக்கு மாகாண ஆரிரியர் நியமனத்துக்கான
பரீட்சையே நல்லதொரு சான்று.நாலைந்து வருடங்கள் பல்வேறு குடும்ப பொருளாத சுமைகளை தோழில் தாங்கிக் கல்விகற்கும் பரீட்சாத்தி பல்கலையில் இருந்து  வெளியேறுவதே பெரும்பாடாக இருக்கும் இக்காலகட்டத்தில் மலையால் விழுந்தவனை மாடு மிதித்தாற்போல்
கிழக்கு மாகாண சபையின் தொழில் நியமனங்கள் ஆக்கி விடுகின்றன.

வடமாகாண சபையின் ஆசிரிய நியமனங்கள் எந்த விதமான
போட்டிப்பரீட்சையும் இன்றி நடைபெறுவதனைப்போல் மூப்பு
அடிப்படையில் அல்லது பாடரீதியில் பட்டதாரி ஆசிரிய நியமனங்களை
நேர்முகத்தேர்வொன்றைவைத்து கிழக்கு மாகாணசபையும் நியமனம்
செய்தால் என்ன?

வெறுமனே போட்டிப் பரீட்சையென்ற பேய்க்காட்டல் மூலம் பட்டதாரியை
பரீட்சித்து பலி தீர்ப்பதைவிட்டும் அவன் தொடர்ந்த பல்கலைக் கல்விக்காக அவனை கெளரவமான முறையில் வேலையொன்றைப் பெறுவதற்கு
அவனை செய்தால் நாடும் வளம் பெறும். பட்டதாரியின் மன உளைச்சலும்
நீங்கும்.