IP அஜ்மீர் மீண்டும் காக்கிச்சட்டையில் (புதிது) Reviewed by Momizat on . 1989 ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து நுவரேலியா பிரதேசத்தில் முதல் பணியை ஆரம்பித்து சுமார் 19 வருட காலப்பகுதிக்குள் நாட்டின் பல பிரதேசங்களில் கடமையாற்றிய D.M.AJMEE 1989 ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து நுவரேலியா பிரதேசத்தில் முதல் பணியை ஆரம்பித்து சுமார் 19 வருட காலப்பகுதிக்குள் நாட்டின் பல பிரதேசங்களில் கடமையாற்றிய D.M.AJMEE Rating: 0

IP அஜ்மீர் மீண்டும் காக்கிச்சட்டையில் (புதிது)

IP அஜ்மீர் மீண்டும் காக்கிச்சட்டையில் (புதிது)

1989 ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து நுவரேலியா பிரதேசத்தில் முதல் பணியை ஆரம்பித்து சுமார் 19 வருட காலப்பகுதிக்குள் நாட்டின் பல பிரதேசங்களில் கடமையாற்றிய D.M.AJMEER பொலிஸ் பரிசோதகராக மீண்டும் சுமார் 11 வருட காலத்திற்கு பின் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

யார் இந்த அஜ்மீர்

கல்முனை நற்பட்டிமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இந்த அஜ்மீர் முஹம்மது இஸ்மாயில் பாத்திம்மா , முஹம்மது இஸ்மாயில் தாவூது தம்பதிகளின் நான்காவது புதல்வராவார்.

தனது ஆரம்பக் கல்வியை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்திலும், தோப்பூர் அல்ஹம்ரா மகாவித்தியாலயத்திலும் கற்று 1989ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து தனது வினைத்திறன் மிக்க சேவையால் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளினால் பல சந்தர்ப்பங்களில் பாராட்டுக்களையும்,சன்மானங்களையும் பெற்று கௌரவிக்கப்பட்டதுடன் மாண்புமிகு ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் கரங்களால் பாராட்டுப் பத்திரமும் பெற்றவர்.

எவ்வாறு இவர் சிறை சென்றார்.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மாளிகாவத்தை பொலீஸ் நிலையத்தில் கடமை புரிந்து கொண்டிருந்த வேளையில் விடுதலைப் புலிகளின் தாக்கம் கொழும்பு பிரதேசத்தில் அதிகமாக இருந்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பு பிரதேசத்தில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகளை குறி வைத்து தாக்க முற்பட்ட பல சந்தர்ப்பங்களில் தனது வினைத்திறன் மிக்க அனுபவத்தாலும் முறி அடித்ததை தாங்க முடியாத சில விஷப்பாம்புகள் இவரின் ஆட்டத்தை நிறுத்த பல சூழ்ச்சிகளை செய்ய ஆரம்பித்தனர். அதன் எதிரொலியாக குறுகிய காலப் பகுதிக்குள் காலிமுகத்திடல் களுத்துறை பொலிஸ் பயிற்சி கலாசாலை போன்ற இடங்களுக்கு அவரை இடமாற்றியதுடன் அவருக்கு பல்வேறுபட்ட கோணங்களில் மன அழுத்தத்தையும் சோதனைகளையும் , வேதனைகளையும் வழங்க ஆரம்பித்தனர்.

களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கலாசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த வேளை.( 2008 ஆம் ஆண்டு) தான் திருக்கோயில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த காலப்பகுதியில் தன்னால் கைது செய்யப்பட்ட சில குற்றவாளிகளின் வழக்கு சம்பந்தமாக சாட்சி செல்வதற்கு சென்று கொண்டிருந்த வேளை சில விஷப்பாம்புகளின் நரி தந்திரத்தால் அரந்தலவ விசேட அதிரடிப் படை முகாமுக்கு அருகாமையில் வைத்து 2008 – 2 – 29ஆம் திகதி காலை11 மணி அளவில் கைது செய்யப்பட்டார்.

விடுதலை

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (CID)கீ ழ் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருட காலம் விசாரணை என்ற போர்வையில் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளையும் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளையும் சட்டமா அதிபரினால் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
அதன் அடிப்படையில் சுமார் எட்டு வருட காலம் கொழும்பு கம்பஹா என பல போராட்டங்களையும், சவால்களையும் சந்தித்து வழக்கறிஞர் திரு ரத்னவேல் அவர்களின் சிறந்த வாதப்பிரதி வாதங்களாலும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை புலனாய்வு பொலிஸ் அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்க முடியாத காரணத்தினால் 2017- 9- 11ஆம் திகதி அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவர் முழு நிரபராதி என தீர்ப்பளித்து விடுதலை செய்தது.

யார் இந்த அஜ்மீர்
Ajmeer IP

மீண்டும் காக்கிச் சட்டை

சுமார் 20 வருட காலம் நேர்மையாக சேவை செய்த ஒரு பொலிஸ் அதிகாரியை செய்யாத குற்றத்தை செய்ததாகக் கூறி சுமார் பத்து வருட காலம் விளக்கமறியல் என்ற போர்வையில் சிறையில் தடுத்து வைத்துவிட்டு அவரரை நீ குற்றவாளி அல்ல எனக்கூறி விடுதலை செய்தது. 
சுமார் பத்து வருட காலம் அவர் இழந்த இழப்புக்களையும், அவமானங்களையும் சோதனைகளையும் வேதனைகளுக்கும் யார் பொறுப்புக் கூறுவது.???

அதன் பின் சுமார் ஒன்றரை வருடகாலம் பாதுகாப்பு அமைச்சர் தொடக்கம் பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட பல அதிகாரிகளை சந்தித்து பல போராட்டத்திற்கு மத்தியில் 2019-03-01 திகதி (சுமார் பதினோரு வருடம் பூர்த்தி) மொனராகலை பொலிஸ் நிலையத்தில் மீண்டும் பணியை ஆரம்பித்தார்.

குறிப்பு – நீதி மன்றத்தால் குற்றவாளி அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்தும் பொலிஸ் திணைக்களத்தில் குறித்த விடயம் சம்மந்தமாக அவருக்கு எதிராக ஒழுக்கார்றல் நடவைக்கை நிலுவை ஒன்று இருப்பதாகக் கூறி அது முடிவடையும் வரை அவருக்கு வழங்க வேண்டிய நிலுவைச் சம்பளத்தையும் பதவி உயர்வையும் தற்க்காலிகமாக பொலிஸ் திணைக்களம் நிறுத்தி வைத்துள்ளவை எந்த்தவகைக்கு நியாயம்???

அவர் கைது செய்யப்படாமல் தொடர்ந்து சேவையில் இருந்திருந்தால் அவர் தற்போது எந்த தரத்தில் இருந்திருப்பாரோ அந்தத் தரமும், அந்தஸ்தும் அவருக்கு மீண்டும் கிடைக்க வேண்டும் எனவும் அவரின் பணி மேலும் மேலும் சிறப்பாக அமைய வேண்டுமெனவும் அவரை வாழ்த்துகின்றோம்.

டி.கே.எம்.றிஸ்வி
கொலொன்னாவை நிருபர்

Clip to Evernote

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top