மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீட்டின் மீது பெறோல் குண்டுத்தாக்குதல் Reviewed by Momizat on . மேல்மாகாணசபை உறுப்பினரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான முகமட் பாயிஸின்  வீட்டின் மீது இனந்தெரியாத சிலர்  பெற்றோல் குண்டுத்தாக்க மேல்மாகாணசபை உறுப்பினரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான முகமட் பாயிஸின்  வீட்டின் மீது இனந்தெரியாத சிலர்  பெற்றோல் குண்டுத்தாக்க Rating: 0

மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீட்டின் மீது பெறோல் குண்டுத்தாக்குதல்

மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் வீட்டின் மீது பெறோல் குண்டுத்தாக்குதல்

மேல்மாகாணசபை உறுப்பினரும்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான முகமட் பாயிஸின்  வீட்டின் மீது இனந்தெரியாத சிலர்  பெற்றோல் குண்டுத்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக புளுமெண்டல் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றுக்(12) காலை சுமார் 0230 மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிசார் சம்பவத்துடன் சமந்தப்பட்ட சந்தே நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

சம்பவம் சமந்தமாக கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் தனது அரசியல் வளர்ச்சியை தாங்க முடியாத சில மிலேச்சத்தனமான வந்தரோத்து அரசியல்வாதிகள் இந்தச் செயலை மேற்கொண்டு இருக்கலாம் என தான் சந்தேகம் கொள்வதாகவும் எது எவ்வாறு இருபினும் தான் மக்களோடு இருப்பதாகவும் , எதிர்காலத்தில் எந்தப் பிரச்சனைக்கும் முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்க்கனவே தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் மீது இரண்டு முறை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொளப்பட்டு தான் உயிர் தப்பியதாகவும் தெரிவித்த உறுப்பினர் தனக்கும் மற்றைய அரசியல்வாதிகள் வாதிகள் போல் வெள்ளவத்தை,குறுந்து வத்தை,தெஹிவளை போன்ற பிரதேசங்களுக்கு சென்று பாதுகாப்பான முறையில் வாழலாம். ஆனால் தன்னை இப்பிரதேச சேரிப்புறத்தில் வாழும் மக்களே அரசியிலுக்குள் கொண்டு வந்தார்கள் அதனால் தான் உயிர் போகும் வரைக்கும் இம்மக்களோடு இந்த சேரிக்குள் இருந்து அவர்களுக்கு ஒரு சேவகனாக சேவை செய்யப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொலொன்னாவை -நிருபர்(டி.கே.எம்.றிஸ்வி)

Clip to Evernote

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top