2,10000 மி.லி கோடா உட்பட பெரும் தொகை கசிப்பு தயாரிக்கும் உபகரனகளுடன் சந்தேகநபர் கையது !

மொனராகல-நக்கல பிரதேசத்தில் நீண்டநாட்களாக பொலிசாரின் கண்களுக்குள் மண்ணைத் தூவிக் கொண்டு சூட்சிதமான முறையில் கசிப்பு தயாரித்து வந்த சந்தேகநபரை ஒரு தொகை பொருட்களுடன் மொனராகலை பொலிசார் கையது செய்துள்ளனர்.
மொனராகலை போதைவஸ்த்து தடுப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் பரிசோதகர் அஜ்மீர் தலைமயில் சென்ற பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கையது செய்து அங்கு இருந்த 210000 ML கோடா உட்பட ஒரு தொகை கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களையும் கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்தனர்.

35 வயதுடைய சந்தேகநபர் வீட்டு வளாகத்துக்குள் இரகசியமான முறையில் யாருக்கும் சந்தேகம் வரதா விதமாக குழிகளை தோண்டி பெரிய பிளாஸ்டிக் பெரல்களை புதைத்து நீண்ட நாட்களாக பாரிய முறையில் குறித்த சட்டவிரோத செயலை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை நாளை(24) மொனராகல நீதவான் நீதிமனத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மொனராகல பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சுஜித் வேதமுல்லவின் ஏற்பாட்டில் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் வேஹித்த தேசப்பிரியவின் விசேட அறிவுறுத்தலின் பெயரில் பொலிஸ் பரிசோதகர் டி.எம். அஜ்மீர் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் நிலையத்தை முற்றுகை இட்டு சந்தேகநபரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
கொலொன்னாவை நிருபர். டி.கே.எம்.றிஸ்வி