இலங்கையில் மிகப்பெரிய முதலை சிலாபம் கடற்பகுதியில் சிக்கியது! Reviewed by Momizat on . இலங்கையில் அதிக நீளமும் அதிக எடையும் கொண்ட இரண்டாவது முதலை புத்தளம் மாவட்டம் சிலாபம் இரணவில் பகுதிக் கடலில் பிடிக்கப்பட்டுள்ளது. சிலாபம் இரணவில் பகுதிக் கடலில் இலங்கையில் அதிக நீளமும் அதிக எடையும் கொண்ட இரண்டாவது முதலை புத்தளம் மாவட்டம் சிலாபம் இரணவில் பகுதிக் கடலில் பிடிக்கப்பட்டுள்ளது. சிலாபம் இரணவில் பகுதிக் கடலில் Rating:

இலங்கையில் மிகப்பெரிய முதலை சிலாபம் கடற்பகுதியில் சிக்கியது!

இலங்கையில் அதிக நீளமும் அதிக எடையும் கொண்ட இரண்டாவது முதலை புத்தளம் மாவட்டம் சிலாபம் இரணவில் பகுதிக் கடலில் பிடிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் இரணவில் பகுதிக் கடலில் மிதந்து கொண்டிருந்த இந்த முதலை நேற்று முன்தினம் (சனிக்கிழமை)பிரதேச இளைஞர்களால் பிடிக்கப்பட்டு வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னர் வில்பத்து சரணாலத்தின் பெரிய நாகவில்லு ஏரியினுள் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதலை சுமார் 15 அடி நீளமும், ஆறு அங்குல அகலமும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் வனவிலங்கு அதிகாரிகளிடம் அகப்பட்ட அதிக நீளமும், அதிக எடையும் கொண்ட இரண்டாவது முதலை இது என புத்தளம் மாவட்ட வனவிலங்கு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

mutali01 mutali-1 mutali02

Clip to Evernote

Comments (1372)