மருதமுனையைச் சேர்ந்த இளம் குடும்பப்பெண் பானு மர்ம மரணம்…! ஒருவர் தலைமறைவு Reviewed by Momizat on . -ஏ.எச்.ஏ.ஹுஸைன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சற்று நேரத்தில் உயிரிழந்து விட்டதாகவும் அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் சேர்ப்பித்த ஆண் தலைமைறைவாகி வி -ஏ.எச்.ஏ.ஹுஸைன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சற்று நேரத்தில் உயிரிழந்து விட்டதாகவும் அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் சேர்ப்பித்த ஆண் தலைமைறைவாகி வி Rating:

மருதமுனையைச் சேர்ந்த இளம் குடும்பப்பெண் பானு மர்ம மரணம்…! ஒருவர் தலைமறைவு

மருதமுனையைச் சேர்ந்த இளம் குடும்பப்பெண் பானு மர்ம மரணம்…! ஒருவர் தலைமறைவு

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சற்று நேரத்தில் உயிரிழந்து விட்டதாகவும் அந்தப் பெண்ணை வைத்தியசாலையில் சேர்ப்பித்த ஆண் தலைமைறைவாகி விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்று (13.10.2016) வியாழக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த பானு (வயது 27) எனும் இரண்டு பிள்ளைகளின் தாயான பெண்ணே இவ்வாறு மர்மமாக உயிரிழந்துள்ளார்.

இந்தப் பெண்ணை மருந்து மாத்திரைகள் விற்பனை முகவரான மலையகத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே தனது காரில் கொண்டு வந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையின்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட பெண்ணின் உடல் நிலை மோசமாகக் காணப்பட்டதால் மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டிமூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரவு 7.20 மணியளவில் அந்தப் பெண் கொண்டுவரப்பட்டுள்ளார். எனினும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்தில் பெண் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை இந்தப் பெண்ணை வைத்தியசாலையில் சேர்ப்பித்த நபரின் கார் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு இன்று (14.10.2016) வெள்ளிக்கிழமை சென்ற மட்டக்களப்பு பொலிஸ் சோக்கோ பிரிவினர் (குற்றச் செயல் நடந்த இடத்தில் பொலிஸ் அணி) தடயங்களை சேகரித்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

காரின் உரிமையாளரான தலைமறைவாகியுள்ள நபரை பொலிஸார் தேடி வருவதோடு களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு மற்றும் சோகோ பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Clip to Evernote

Comments (2028)