#விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்ததையடுத்து ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்ட #கருணா அம்மான் கைது Reviewed by Momizat on . முன்னாள் அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவில் இன்று (29) ஆஜரானார். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தை முறைகேடா முன்னாள் அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவில் இன்று (29) ஆஜரானார். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தை முறைகேடா Rating:

#விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்ததையடுத்து ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்ட #கருணா அம்மான் கைது

#விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்ததையடுத்து ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்ட #கருணா அம்மான் கைது

முன்னாள் அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவில் இன்று (29) ஆஜரானார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக அவர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சராக இருந்தார்.

இதன்போது அவருக்கு வழங்கப்பட்ட ரூபா 9 கோடி பெறுமதியான குண்டு துளைக்காத வாகனம் ஒன்றை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள வாகன திருத்துமிடம் ஒன்றிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டிருந்தமை தொடர்பிலேயே குறித்த விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருணா அம்மான் சற்றுமுன் கைது!

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதி பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள கருணா அம்மான், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Clip to Evernote

Comments (2359)