கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது!

கூட்டு எதிர்க்கட்சியினர் நளைய தினம் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவில் தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டு மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.  கொள்ளுப்பிட்டி பொலிஸார் தாக்கல் செய்த இந்த மனு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.  கூட்டு எதிர்க்கட்சியினர் நளைய தினம் "மக்கள் பலம் கொழும்புக்கு" என்ற கருப் பொருளில் மாபெரும் ஆர்ப்பாட ...

Read more

ஈழத்தமிழர்களின் தங்கம் எங்கே? நாடாளுமன்றில்  கேள்வி.. அரசாங்கத்தின் பதில் என்ன தெரியுமா?

நாட்டில் இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் அந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் பெறுமதியான பொருட்கள், தங்கம் எல்லாம் எங்கே என நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த பகீர் கேள்வியை அரசாங்கத்திடம் முன்வைத்தார். இதன்போது, “யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் ...

Read more

அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அயர்லாந்தில் ஒரு வீடு ????

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அயர்லாந்தில் ஒரு வீடு இருப்பதாக இணைய ஊடகங்களில் பொய்யான செய்தி வெளியிடப்பட்டிருந்ததாக ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா,பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறித்து பல இணைய ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட் ...

Read more

நுகேகொடை கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் திருகோணமலையில்…. 

திருகோணமலை - கோமரங்கடவல பிரதேசத்தில் இன்று கூட்டு எதிரணியினரால் வருகின்ற 27 ஆம் திகதி நுகேகொடையில் நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு ஆதரவும், பங்களிப்பும் மற்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்யும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதற்கு அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சோமசிங்க வருகைதந்திருந்தார். மற்றும் கோமரங்கடவல,கிண்னியா,மொரவெவ, கந்தளாய் பிரதேசங்களின் முன்னாள் பிரதேச சபை தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பின ...

Read more

இலஙகையில் உள்ள மாகாணங்களை மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் . (எம். ஏ. சுமந்திரன் MP)

மாகாண சபைகள், மாகாண அரசுகள் என அழைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் வட மாகாண முதலமைச்சருக்கும் வழங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் க ...

Read more

ஜும்ஆ நேரத்தில் தன்னைச் சந்திக்க வரவேண்டாம் என சித்தீக் ஆகிய எனக்கு கூறிய மனோ கணேசன்!

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோ கணேசன் அவர்களை நாளை (20) நான் சந்திக்க வேண்டிய தேவை இருப்பதாலும் வேறு ஒரு விடயத்துக்காகவும் அவருடன் இன்று (19) தொலைபேசியில் உரையாடினேன். இதன்போது நாளை சந்திப்பது தொடர்பில் அவரிடம் நான் கேட்ட போது அவர் என்னை பகல் 1.00 மணியளவில் அமைச்சுக்கு வரும்படி கூறினார். நாளை வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணி என்பது ஜும்ஆ தொழுகை நேரம் என்பதனை நான் எனது மன ...

Read more

சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயலும் துமிந்த சில்வா! :உடனடி விசாரணை கோரும் துமிந்த சில்வாவின் தந்தை…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 5 பேர் சிறைச்சாலையில் இருந்து தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக, தினமின பத்திரிகை இன்று வெளியிட்ட உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தந்தையான லால் சில்வா சிறைச்சாலை அதிகாரிகளிடம் விடுத்துள்ளார். குறித்து உண்மைக்கு புறம்பான செய்தி மூ ...

Read more

மிருகங்களுடன் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரினால் அதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்குமா – சுஜீவ

மிருகங்களுடன் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரினால் அதற்கும் அரசாங்கம் அனுமதி அளிக்குமா என ராஜாங்க அமைச்சர் சுஜீவ  நேற்றைய அமைச்சரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி வரி சலுகையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வெளிநாட்டு அமைச்சு சார்பாக முன்வைத்த National action plan for the protection and promotion of human rights 2017-2021 யோசனையில் ஓரின சேர்க்கையை அங்கீகரிப்பது தொடர்பில்  அமைச்சரவை ...

Read more

ஓரினச்சேர்கையை சட்டபூர்வமாக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி ஆட்சேபனை

இலங்கைக்கு ஜீ எஸ் பீ சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள ஓரினச் சேர்க்கையின் தடையினை நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவ்வாறு இலங்கை அதனை சட்டபூர்வமாக்கும் கோரிக்கைக்கு ஜனாதிபதி ஆட்சேபனை விதித்துள்ளதாக ராஜாங்க நிதி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இலங்கையின் கலாசாரம் ...

Read more

பழிதீர்க்கும் மின்னல் …

*MA கலீலுர் ரகுமான்* ஜனவரி 15, 2017 அன்றைய மின்னல் நிகழ்வில் பக்குவம் பேணவேண்டிய இரண்டு பெரும் புள்ளிகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பிரஜைகள் குழு தலைவர் ஸ்ரீரங்காவும் முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் ஜனாப் Y.L.S. ஹமீது அவர்களும் தமது தனிப்பட்ட பளிதீர்புக்களை மையப் படுத்தி மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்வினூடாக ஒரு கட்சியின் தலைமையையும் அதனது நடவடிக்கைகளையும் மிக ...

Read more

© 2015-2017 Powered by Sri Lankan Echo

Scroll to top