அரசை பகைத்துக் கொண்டாவது மீத்தொட்டமுல்லை குப்பை மேட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டியுள்ளது! – பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்

மீத்தொட்டமுல்லை குப்பை மேட்டு பிரச்சினை தற்போது மிக மோசமான கட்டத்துக்கு வந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன் அங்கு ஏற்பட்ட தீ அதை புலப்படுத்துகின்றது. அரசுக்கு விரோதமாகச் சென்றாவது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார். கொடுவில சுமேதாராம விகாரையில் இடம்பெற்ற ஒரு வைபவத்தில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித ...

Read more

கொலோன்னவா -கிரீன் பிரிச் சர்வதேச பாடசாலையின் இல்லவிளையாட்டுப் போட்டி!

கிரீன் பிரிச் சர்வதேச பாடசாலையின் இல்லவிளையாட்டுப் போட்டி கடந்த புதன்கிழமை கொழும்பு மூர் மைதனத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது .பிரதமஅதிதியாக மேல்மாகான உறுப்பினர் முகமட் பாயிஸ் கலந்துகொண்டதுடன் மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். ...

Read more

அரச பஸ்ஸில் ஏற்றிச் சென்ற விடுதலைப் புலிகள் எங்கே….?

    விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இந்த பலரை எனது கணவருடன் சேர்த்து அரச பேருந்தில் ஏற்றிச் சென்றார்கள். அதை நான் கண்டேன், தற்போது அவர்கள் எங்கே? என நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்று 29ஆம் நாளாக தொடர்கின்றது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்வாகத்துறை துணை பொறுப்பாளர் இளஞ்சேரனின் மனைவி ஊடகங்களிட ...

Read more

தீர்வின்றி தொடரும் தொழிலற்ற பட்டதாரிகள் போராட்டங்கள்…

மட்டக்களப்பில் தொழிலற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. தமக்கான தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்குமாறு கோரி தொழிலற்ற பட்டதாரிகள் கடந்த பெப்ரவரி மாதம்  முதல் மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாகவுள்ள காந்தி பூங்காவில் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலையில் போராட்டக்காரர்களால் மனித சங்கிலி போராட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்ட ...

Read more

டெங்கு நோயில் மறைந்து இருக்கும் உண்மைகள் !!

வீடுகளில் காணப்படும் சிரட்டை டின் டயர் தேங்காய் மட்டை வீட்டு கூரை போன்றவற்றில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு உற்பத்தியாகிறது என்றால் 1)வீதியில் உள்ள வடிகாண்களில் தேங்கி நிற்கும் நீரிலிருந்து டெங்கு நுளம்பு உற்பத்தியாகாதா ? 2)வேற்றுக் காணிகளில் தேங்கி நிற்கும் நீரிலிருந்து டெங்கு நுளம்பு உற்பத்தியாகாதா ? இந்த கேழ்வியை சுகாதார பரிசோதகர்களிடம்(PHI) கேட்டால் வீடுகளில் உள்ள குறைபாடுகளை தான் பற்றி பதில் கூ ...

Read more

தேசத்திற்கு பங்களித்த நான்கு முஸ்லிம்களுக்கு ‘தேசிய விருது’

தாய்நாட்டுக்காக உன்னதமான பணியில் ஈடுபட்ட, உன்னதமான இலங்கையர்களுக்கு தேசிய விருது வழங்கப்படும் “தேசிய விருது விழா 2017” ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் திங்கட் கிழமை நடைபெற்றது. இதில் தேசத்திற்கு சேவையாற்றிய 89 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விருதைப் பெற்றவர்களில் நால்வர் முஸ்லிம்களாவர். அச்சி முகம்மது இஷாக்( ஸ்ரீ லங்கா சிகாமனி விருது), அப்பாஸ் அலி அக்பர் அ ...

Read more

யாராவது பலியாகும்வரை காத்திருக்கின்றார்களா? சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா? காரைதீவு சகா

பிரதான வீதியில் இப்படியொரு மரணப்பொறியா? கல்முனை அம்பாறை பிரதானவீதியின் காரைதீவிலுள்ள ஒரு மரணப்பொறியையே இங்கு காண்கிறீர்கள். ஆம் இது காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் மேற்குப்பக்கமாகவுள்ள பிரதானவீதியில் எவ்வித பாதுகாப்புமற்று இக்குழி அமைந்துள்ளது. கார்ப்பட் வீதியின்முடிவிடத்தில் எவ்வித ஆரம்பமுமின்றி இக்குழி பாதுகாப்பற்று இருப்பதனால் இதுவரை இக்குழியில் பலர் வீழ்நது காயத்துடன் சென்றிருக்கிறார்கள். இக்குழியில் ய ...

Read more

மீண்டும் யாழை அதிரவைத்த வாள்வெட்டு குழு..! ஆலயத்தில் தஞ்சமடைந்த பொது மக்கள்

வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் காரணமாக அச்சமடைந்த பொது மக்கள் ஆலயம் ஒன்றில் தஞ்சமடைந்த சம்பவம் ஒன்று யாழ். வடமராட்சி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழுவினர் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள 10க் ...

Read more

கிண்ணியாவில் MFCD யின் இரத்த பரிசோதனை முகாம்!

உயிர் கொல்லி நோயான டெங்குவினால் அவதியுறும் கிண்ணியா பிரதேச மக்களின் துயர் துடைக்கும் நோக்கில் MFCD நிறுவனம் தனது முதலாவது இரத்தப் பரிசோதனை முகாமை கடந்த 2017-03-18 சனிக்கிழமை  நடாத்தியது. இதில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் 110 நோயாளர்கள் இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அமைப்பின் தலைவர் ஹனான் ஹுசையின் தெரிவித்தார். இந்நிகழ்வில் MFCD நிறுவனத்தின் தலைவர் ஹனான் ஹு ...

Read more

கிழக்கு மாகாண சபை ஒரு மணிநேரம் ஒத்திவைப்பு –

கிழக்கில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரக் கூட்டமொன்று இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது. மாகாண சபைக்ககட்டடத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மாகாண சபையின் தவிசாளர், மாகாண அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், தலைமைச்செயலாளர், முதலமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர்கள் உட்பட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் ...

Read more

© 2015-2017 Powered Sri Lankan Echo

Send News and Articles
Loading...
content protection is powered by http://jaspreetchahal.org
Scroll to top